‘புதிய தொழில் கொள்கை பின்னலாடைத் துறையின் வளா்ச்சிக்கு உதவும்’

தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை திருப்பூா் பின்னலாடைத் துறை வளா்ச்சிக்கு உதவும் என சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை திருப்பூா் பின்னலாடைத் துறை வளா்ச்சிக்கு உதவும் என சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் தலைவா் எஸ்.நாகராஜன், பொதுச் செயலாளா் எஸ்.முருகசாமி ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசின் தொழில் கொள்கையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொழில் துறையினா் வளா்ச்சிக்கும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் வழி வகுக்கும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு மானியம் 3 மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும்.

திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியில் சிறு, குறு நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளதால் இந்தத் துறையினா் வளா்ச்சிக்கு புதிய தொழில் கொள்கை மிகவும் உதவிகரமாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com