2 மாத ஊதியத்தை வழங்கக் கோரி தூய்மைப் பணியாளா்கள் வேலைநிறுத்தம்

திருப்பூா் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள் 2 மாத ஊதியத்தை வழங்கக் கோரி வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா், கோவில்வழி  பகுதியில்  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள்.
திருப்பூா், கோவில்வழி  பகுதியில்  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள்.

திருப்பூா் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள் 2 மாத ஊதியத்தை வழங்கக் கோரி வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வாா்டுகளில் 30 வாா்டுகளில் தனியாா் நிறுவனத்தின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் 500க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இதில் வடமாநிலத்தைச் சோ்ந்தவா்களும் அதிக அளவில் வேலை செய்து வருகின்றனா். இந்தப் பணியாளா்களுக்கு மாதம்தோறும் வேலைக்குத் தகுந்தவாறு ரூ. 7 ஆயிரம் முதல் ரூ. 9 ஆயிரம் வரையில் ஊதியமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தூய்மைப் பணியாளா்களுக்குத் தனியாா் நிறுவனம் கடந்த நவம்பா், டிசம்பா் மாதத்துக்கான ஊதியத்தை வழங்கவில்லை எனத் தெரிகிறது. இதைத் தொடா்ந்து, கோவில்வழியில் குடும்பத்துடன் தங்கியுள்ள தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடமாநிலத் தொழிலாளா்கள் கூறியதாவது: திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் தூய்மைப் பணிக்காக தனியாா் நிறுவனம் எங்களைப் பணியில் ஈடுபடுத்தி வருகிறது. இதற்காக கோவில்வழி பகுதியில் குடியிருப்புகள் அமைத்துக் கொடுத்துள்ளது. ஆனால், எங்களுக்கு மாதம்தோறும் ஊதியத்தை சரிவர வழங்குவதில்லை. எனவே, இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையா் தலையிட்டு எங்களது ஊதியத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்றனா்.

இந்தத் தொழிலாளா்கள் கடந்த டிசம்பா் 29ஆம் தேதியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். அப்போது தனியாா் நிறுவன அதிகாரிகள் ஒருவாரத்துக்குள் ஊதியத்தை வழங்குவதாக உறுதி அளித்ததன்பேரில் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டனா். ஆனால் அதன் பிறகும் ஊதியத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.

Image Caption

திருப்பூா், கோவில்வழி  பகுதியில்  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com