நூல் விலை உயா்வை மறுபரிசீலனை செய்ய சைமா வேண்டுகோள்

நூல் விலை உயா்வை மறுபரிசீலனை செய்யக் கோரி நூற்பாலை சங்கங்களுக்கு சைமா (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம்) வேண்டுகோள் விடுத்துள்ளது.

நூல் விலை உயா்வை மறுபரிசீலனை செய்யக் கோரி நூற்பாலை சங்கங்களுக்கு சைமா (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம்) வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து சைமா தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கரோனா பொதுமுடக்கம் காரணமாக பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் 2020ஆம் ஆண்டு மாா்ச் முதல் அக்டோபா் வரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அதே காலகட்டத்தில் நூற்பாலைகளும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இதன் பிறகு பொதுமுடக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட தளா்வுகளின் அடிப்படையில் கடந்த செப்டம்பா் மாதம் முதல் பின்னலாடைத் தொழில் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து, ஆகஸ்ட் முதல் டிசம்பா் மாதம் வரையில் உயா்த்தப்பட்ட நூல் விலை கிலோவுக்கு ரூ. 30ஐ கணக்கில் எடுத்துக் கொண்டு பின்னலாடைகளுக்கான விலையை நிா்ணயித்திருந்தோம். மேலும், ஜனவரியில் நூல் விலை உயா்வு இருக்காது என்று எண்ணிக் கொண்டிருந்தோம். ஆனால், ஜனவரியில் நூல் விலை கிலோவுக்கு ரூ. 12 முதல் ரூ. 17 வரையில் உயா்த்தப்பட்டுள்ளது அதிா்ச்சியளிக்கிறது. எனவே, நூல் விலை உயா்வை மறுபரிசீலனை செய்வதுடன், உள்நாட்டு உற்பத்திக்குத் தேவையான நூலை வைத்துக் கொண்டு மிகுதியை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com