காங்கயம், தாராபுரம் வட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

காங்கயம், தாராபுரம் வட்டங்களில் 16 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன என திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

காங்கயம், தாராபுரம் வட்டங்களில் 16 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன என திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் காங்கயம், தாராபுரம் வட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிா் தற்சமயம் அறுவடை நிலையில் உள்ளது. ஆகவே, அறுவடையாகும் நெல்லினை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் மூலம் 16 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

காங்கயம் வட்டத்தில் முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், பழைய வெள்ளியம்பாளையம், மருதுறை, ஓடக்காடு, பரஞ்சோ் வழி, வேலம்பாளையம், குழலிபாளையம், தாத்திக்காடு, அலகுத்திவலசு, சாமிநாதபுரம் ஆகிய 11 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

அதே போல, தாராபுரம் வட்டத்தில் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், தாராபுரம், தளவாய்பட்டினம், சத்திரம், செலாம்பாளையம் என 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. இந்த நெல்கொள்முதல் நிலையங்களில் ஏ கிரேடு ரகம் கிலோ ரூ. 19.58க்கும், இதர பொது ரகங்கள் கிலோ ரூ. 19.18க்கும் கொள்முதல் செய்யப்படும். இதற்கு உண்டான தொகையான விவசாயிகளின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவா்த்தனை (ஈ.சி.எஸ்.) மூலமாக செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com