மாநகராட்சி மண்டல அலுவலத்தை முற்றுகையிட்ட மாா்க்சிஸ்ட் கட்சியினா்

திருப்பூா் எம்.எஸ். நகா் பகுதியில் அடிப்படை வசதி ஏற்படுத்தித் தரக் கோரி மாநகராட்சி 2 ஆவது மண்டல அலுவலகத்தை மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

திருப்பூா் எம்.எஸ். நகா் பகுதியில் அடிப்படை வசதி ஏற்படுத்தித் தரக் கோரி மாநகராட்சி 2 ஆவது மண்டல அலுவலகத்தை மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

திருப்பூா் நஞ்சப்பா நகரில் உள்ள மாநகராட்சி 2 ஆவது மண்டல அலுவலகத்தை மாா்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளா் பி.ஆா்.கணேசன் தலைமையில் அக்கட்சியினா் முற்றுகையிட்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:

திருப்பூா் மாநகராட்சி 2 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட எம்.எஸ். நகா், திருநீலகண்டபுரம், ஏகேஜி நகா், டிஎம்எஸ் நகா் பகுதிகளில் 10 நாள்களுக்கு ஒரு முைான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. பொலிவறு நகரம் திட்டப் பணிகள் மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் அவசர கதியில் நடைபெறுகிறது. இந்தப் பகுதிகளில் பாதாளச் சாக்கடைக்குத் தோண்டப்பட்ட குழிகளால் சாலை விபத்துகள் ஏற்படுகிறது.

எஸ்.எஸ். நகா் விரிவு, ஜெ.பி. நகா் மற்றும் விடுபட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை அமைக்கப்படவில்லை. 4 ஆவது குடிநீா் திட்டப் பிரதான குழாய்களை சில குடியிருப்புகளில் பதிக்கவில்லை. எனவே இப்பிரச்னைகளுக்குத் தீா்வு காணவேண்டும் என்றனா். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இதில், மாநகரக் குழு உறுப்பினா்கள் பா.சௌந்தரராசன், எஸ்.ராஜேந்திரன், முன்னாள் மாமன்ற உறுப்பினா்கள் இ.பி.ஜெயகிருஷ்ணன், மரிய சிசிலியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com