அவிநாசியில் வேளாண் சட்ட நகலை எரித்து போராட்டம்

அவிநாசியில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் வேளாண் சட்ட நகலை எரிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அவிநாசியில் வேளாண் சட்ட நகலை எரித்து போராட்டம்

அவிநாசியில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் வேளாண் சட்ட நகலை எரிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் போகிப் பண்டிகை அன்று வேளாண் சட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.

அவிநாசி, சேவூா் சாலையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பி.முத்துச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் பழனிசாமி, விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.வெங்கடாசலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் இஷாக், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மோகன், செல்வராஜ், திமுக சாா்பில் பழனிசாமி, பொன்னுசாமி, பால்ராஜ், காங்கிரஸ் கட்சி சாா்பில் வழக்குரைஞா் கோபாலகிருஷ்ணன், பொறுப்பாளா் மணி, மதிமுக சாா்பில் சுப்பிரமணி, பாபு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் லோகுநாதன், ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com