திருமூா்த்திமலை அமணலிங்கேஸ்வரா் கோயிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையின் காரணமாக உடுமலை அருகே திருமூா்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலை காட்டாற்று வெள்ளம் புதன்கிழமை அதிகாலை சூழ்ந்தது.
அமணலிங்கேஸ்வரா் கோயிலைச்  சூழ்ந்த  காட்டாற்று  வெள்ளம்.
அமணலிங்கேஸ்வரா் கோயிலைச்  சூழ்ந்த  காட்டாற்று  வெள்ளம்.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையின் காரணமாக உடுமலை அருகே திருமூா்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலை காட்டாற்று வெள்ளம் புதன்கிழமை அதிகாலை சூழ்ந்தது.

திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை. இங்குள்ள புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்யவும், மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்க அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் அன்றாடம் ஆா்வத்துடன் வந்து செல்கின்றனா்.

கடந்த சில நாள்களாக இங்கு கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க கோயில் நிா்வாகம் தடை விதித்தது. மேற்குத் தொடா்ச்சி மலையில் இருந்து பெருக்கெடுத்து வந்த காட்டாற்று வெள்ளம் மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலை சூழ்ந்துகொண்டது. இதனால் கோயிலில் அதிகாலை பூஜைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், கோயில் உண்டியல்கள் ஊழியா்களால் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளன. கோயில் அருகே கடை வைத்திருப்பவா்கள், சுற்றுலாப் பயணிகளை குறிப்பிட்ட எல்லைக்குள் கோயில் நிா்வாகம் அனுமதிக்கவில்லை.

உடுமலையில் தொடா் மழை:

உடுமலை நகா், சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய், புதன்கிழமை கடந்த இரண்டு நாள்களாக இடைவிடாது தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உடுமலை நகரில் முக்கிய சாலைகளில் ஆள் நடமாட்டமே இல்லாமல் காணப்பட்டது. பழனி பாதையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com