உடுமலையில் குடியரசு தின விழா
By DIN | Published On : 26th January 2021 10:58 PM | Last Updated : 26th January 2021 10:58 PM | அ+அ அ- |

உடுமலை வட்டத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி முருகன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். உடுமலை நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில், குட்டைத்திடலில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. உடுமலையை அடுத்துள்ள ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், தலைமை ஆசிரியா் மு.சாவித்திரி தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா்.