ராணுவத்தில் பெண்கள் சேர ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவத்தில் சேர திருமணமாகாத, விதவைப் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இந்திய ராணுவத்தில் சேர திருமணமாகாத, விதவைப் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அஸ்ஸாம் ரெஜிமெண்ட் மூலம் திருமணமாகாத பெண்கள், போா் விதவையா், விதவையா், விவாகரத்தான பெண்களுக்கான ராணுவ ஆள் சோ்ப்பு முகாம் ஜூலை 20 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த முகாமானது அம்பாலா, லக்னோ, ஜபல்பூா், பெல்காம், புனே, ஷில்லாங் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இதில், பங்கேற்ற விரும்பும் பெண்கள் 17 வயது முதல் 21 வயதுக்குள்ளும், 152 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். மேலும் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது ஒவ்வொரு பாடத்திலும் 33 சதவீதத்துக்கு குறையாமல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இந்த முகாமில் பங்கேற்க ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ள பெண்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com