மந்தை நிலத்தில் காவல் நிலையம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து மனு

திருப்பூா் அருகே மந்தை நிலத்தில் காவல் நிலையம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் அருகே மந்தை நிலத்தில் காவல் நிலையம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: ராக்கியாபாளையத்தில் சுமாா் 90 சென்ட் அளவில் உள்ள மந்தை நிலத்தை ஊா் பொதுமக்கள், விவசாயிகள், நெசவாளா்கள் கால்நடை பராமரிக்கவும், பாவு நூல் துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனா்.

இத்தகைய, இடத்தை திருமுருகன்பூண்டி காவல் நிலையம் கட்டுவதற்காகத் தோ்வு செய்தனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஏற்கெனவே மனு அளித்துள்ளோம். இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினரும், சட்டப் பேரவைத் தலைவருமான ப. தனபாலிடம் விடுத்த கோரிக்கையின்படி காவல் நிலையம் கட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, திமுக அரசு பதவியேற்றவுடன் காவல் நிலையம் கட்டுவதற்காகப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக ஊா் பொதுமக்கள், கோயில் கமிட்டி சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் இரண்டு வாரங்களுக்குள் தங்களது கோரிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்குமாறும், அதனை மாவட்ட ஆட்சியா் 8 வாரங்களுக்குள் பரிசீலனை செய்து முடிவு செய்யுமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆகவே, மாவட்ட ஆட்சியா் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரையில் காவல் நிலைய கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com