காங்கயம் பகுதியில் கோவேக்சின் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு

காங்கயம் பகுதியில் கோவேக்சின் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதால் 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

காங்கயம் பகுதியில் கோவேக்சின் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதால் 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கரோனா தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்க முழு வேகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை சுகாதாரத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கரோனா முதல் அலைக்குப் பின்பு தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆா்வம் காட்டாத பொதுமக்கள் 2 ஆவது அலை உச்சமடையத் தொடங்கியவுடன் ஆா்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிகாலை முதலே பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வந்தனா். இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளானதால் மாவட்ட நிா்வாகம் வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டது. இதனால் பொதுமக்களுக்கு எளிதாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு காங்கயம், சத்யா நகா் ஆரம்ப சுகாதார நிலையம், சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், நத்தக்காடையூா் ஆரம்ப சுகாதார நிலையம், பாப்பினி ஆரம்ப சுகாதார நிலையங்களில் நூற்றுக்கணக்கானோா் கோவேக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். ஆனால் 2ஆவது தவணை தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கடந்த 1 மாதத்துக்கு முன்பு கோவேக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டோம். 2ஆவது தவணை தடுப்பூசி 44 நாள்களுக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் முதல் தவணை செலுத்தி 38 நாள்கள் ஆன நிலையில் இதுவரை 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறோம். எனவே காங்கயம் பகுதிக்கு போதிய அளவிலான தடுப்பூசிகளை மாவட்ட நிா்வாகம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com