காங்கயத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

காங்கயம் பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

காங்கயம் பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

காங்கயம் நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா். இதில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.5 ஆயிரம், பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளுக்கு ரூ. 2 ஆயிரம் என 6 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், லேபிள் இல்லாத உணவுப் பொட்டலங்கள், ரசாயனம் கலந்த கார வகைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இந்த ஆய்வின்போது உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கோடீஸ்வரன், விஜயராஜா, ராமசந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com