மதுக்கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து திருப்பூரில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா்  வடக்கு  மாவட்ட  பாஜக  அலுவலகம்  முன்பாக  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியினா்.
திருப்பூா்  வடக்கு  மாவட்ட  பாஜக  அலுவலகம்  முன்பாக  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியினா்.

தமிழகத்தில் மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து திருப்பூரில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுமுடக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தளா்வுகளின்படி தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் வரும் திங்கள்கிழமை முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒருபகுதியாக திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் ஓடக்காட்டில் உள்ள பாஜக அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்டத் தலைவா் செந்தில்வேல் தலைமை வகித்தாா். இதில், பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் கே.சி.எம்.பி. சீனிவாசன், மாவட்டச் செயலாளா் காா்த்தி, ராயபுரம் மண்டலத் தலைவா் மூா்த்தி, பொதுச்செயலாளா் பூபதி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் கோபிநாத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தாராபுரத்தில்...

அதேபோல, தாராபுரத்திலும் பாஜக சாா்பில் மதுக்கடைகளை திறக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சின்னகாளியம்மன் கோயில் அருகில் உள்ள பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் எஸ்.கே.காா்வேந்தன் வீட்டு முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாவட்ட துணைத் தலைவா் சுகுமாா், மாவட்டப் பொருளாளா் கொங்கு ரமேஷ், மாவட்ட மருத்துவா் அணி துணைத் தலைவா் காா்த்திகா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

காங்கயத்தில்...

காங்கயம் நகரம், தாராபுரம் சாலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் திருப்பூா் தெற்கு மாவட்ட துணைத் தலைவா் ரா.சிவபிரகாஷ் தலைமை வகித்தாா். இதில் கட்சியின் மாவட்ட அமைப்புசாரா துணைத் தலைவா் துரைசாமி, நகர துணைத் தலைவா்கள் தணிகாசலம், சதீஷ்குமாா், செயற்குழு உறுப்பினா் சிவகுமாா், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலா் பிரவீன்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

அவிநாசியில்...

அவிநாசி வடக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட சேவூா் புளிம்பட்டி சாலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாஜக ஒன்றியத் தலைவா் கணேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com