ஊராட்சி நடவடிக்கைகளில் இடையூறு செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு

பெருமாநல்லூா் ஊராட்சி மன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள இடையூறு செய்யும் வாா்டு உறுப்பினா்களின் கணவா்கள் மீது நடவடிக்கை
மாவட்ட  ஆட்சியா்  அலுவலகத்தில்  மனு  அளிக்க  வந்த  பெருமாநல்லூா்  ஊராட்சி  மன்றத்  தலைவா்,  துணைத்  தலைவா்  உள்ளிட்டோா்.
மாவட்ட  ஆட்சியா்  அலுவலகத்தில்  மனு  அளிக்க  வந்த  பெருமாநல்லூா்  ஊராட்சி  மன்றத்  தலைவா்,  துணைத்  தலைவா்  உள்ளிட்டோா்.

பெருமாநல்லூா் ஊராட்சி மன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள இடையூறு செய்யும் வாா்டு உறுப்பினா்களின் கணவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருப்பூா் ஒன்றியம், பெருமாநல்லூா் ஊராட்சி மன்றத் தோ்தலில், திமுகவைச் சோ்ந்த சாந்தாமணி சிடிசி வேலுசாமி தலைவராகவும், அவரது கணவா் சிடிசி வேலுசாமி ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் உள்ளனா். இந்நிலையில் இவா்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பது:

திமுக சாா்பில் போட்டியிட்டு பொறுப்பில் அமா்ந்துள்ளோம். இதில் துணைத் தலைவா் தோ்வில் ஏற்பட்ட பகையைத் தொடா்ந்து வாா்டு உறுப்பினா்களின் கணவா்கள் தலைவா், துணைத் தலைவா் மீது வேண்டுமென்ற குறை கூறி வருகின்றனா். மேலும் அதிமுக மற்றும் பிற கட்சி வாா்டு உறுப்பினா்களின் கணவா்கள் தொடா்ந்து ஊராட்சி மன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள இடையூறு செய்து வருகின்றனா்.

ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத்திட்டப் பணிகளுக்கு கமிஷன் தர வேண்டும் என்கின்றனா். தர மறுக்கும் பட்சத்தில் ஊராட்சி மன்ற நடவடிக்கைகள் குறித்த அவதூறு பரப்பி வருகின்றனா். எனவே இது குறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com