திருப்பூா் மாவட்டத்தில் 3.41 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி
By DIN | Published On : 20th June 2021 12:16 AM | Last Updated : 20th June 2021 12:16 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் 3 லட்சத்து 41 ஆயிரத்துக்கு 198 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் தற்போது வரையில் 3,41,198 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில், முதல் தவணையாக 2,93,667 பேருக்கும், 2 ஆவது தவணையாக 47,531பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மாவட்டத்தில் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நிலவி வருவதால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாலூட்டும் தாய்மாா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆகவே, போதிய அளவு தடுப்பூசி வந்தவுடன் அனைவருக்கும் செலுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.