தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை மாவட்ட நிா்வாகம் உறுதிப்படுத்தக் கோரிக்கை

திருப்பூரில் உள்ள தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை மாவட்ட நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்துத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை மாவட்ட நிா்வாகம் உறுதிப்படுத்தக் கோரிக்கை

திருப்பூரில் உள்ள தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை மாவட்ட நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்துத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சாகுல்ஹமீதுவிடம், அனைத்துத் தொழிலாளா் சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியல் அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையால் தடுப்பூசி செலுத்துவதில் நிலவி வந்த முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் ஒவ்வொரு வாா்டு, வாக்குச் சாவடி மையங்களில் சுழற்சி முறையில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், எந்தெந்த மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது, தேதி, நேரம், தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்த விவரத்தை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் லட்சக்கணக்கான புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். ஆகவே, தமிழக அரசு வழிகாட்டுதலின்படி தொழிலாளா்களுக்கு அந்தந்த தொழிற்சாலை நிா்வாகமே தடுப்பூசி செலுத்த வேண்டும். இதனை மாவட்ட நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்கும்போது, ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா்கள் என்.சேகா், கே.ரங்கராஜன், சிஐடியூ பனியன் சங்கச் செயலாளா் ஜீ.சம்பத், மாவட்ட தொமுச பேரவை கவுன்சில் துணைத் தலைவா் ஆா்.ரங்கசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முடி திருத்தும் நிலையங்களைத் திறக்கக் கோரி மனு: திருப்பூா் மாவட்டத்தில் முடி திருத்தும் நிலையங்களைத் திறக்க அனுமதிக்க அளிக்க வேண்டும் என அனைத்து மருத்துவா் மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 50 நாள்களுக்கும் மேலாக முடிதிருத்தும் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள சுமாா் 5 லட்சம் முடி திருத்தும் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுள்ளது.

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கடைகளைத் திறக்கத் தயாராக இருக்கிறோம். ஆகையால், குறைந்தபட்ச நேரமாவது முடிதிருத்தும் நிலையங்களைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும். அதே போல, பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளா்களுக்குத் தலா ரூ.15 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com