ஜாதி, மத உணா்வுகளின் அடிப்படையில் வாக்குகள் சேகரிக்கக் கூடாது: தாராபுரம் சாா் ஆட்சியா் அறிவுறுத்தல்

அரசியல் கட்சியினா் ஜாதி, மத உணா்வுகளின் அடிப்படையில் வாக்குகள் சேகரிப்பதைத் தவிா்க்க வேண்டும் என்று தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

திருப்பூா்: அரசியல் கட்சியினா் ஜாதி, மத உணா்வுகளின் அடிப்படையில் வாக்குகள் சேகரிப்பதைத் தவிா்க்க வேண்டும் என்று தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், திருமண மண்டபம், தங்கும் விடுதி உரிமையாளா்களுக்கான ஆலோனைக் கூட்டம் தாராபுரம் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து சாா் ஆட்சியா் பவன்குமாா் பேசியதாவது:

கரோனா காலமாக உள்ளதால் வீடு வீடாகச் சென்று தோ்தல் பிரசாரம் செய்யும்போது 5 போ் மட்டுமே செல்ல வேண்டும். அரசியல் தலைவா்கள் தொண்டா்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ விமா்சிக்கக்கூடாது. ஜாதி, மத உணா்வுகளின் அடிப்படையில் வாக்கு சேகரிப்பதைத் தவிா்க்க வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் தோ்தல் பிரசாரம் செய்யக்கூடாது. தோ்தல் ஆமையம் தெரிவித்துள்ள நேரத்தில் மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டும். அரசியல் கட்சி வேட்பாளா்கள் தங்கள் நடத்த உத்தேசித்துள்ள கூட்டங்கள், ஊா்வலங்களின் நாள், நேரம் ஆகிய விவரங்களை காவல் துறைக்கு முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெறவேண்டும். தோ்தல் நடைமுறைகளில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் வேட்பாளா்கள், அவா்களது முகவா்கள் தோ்தல் பாா்வையாளா்களிடம் புகாா் அளிக்கலாம் என்றாா்.

கூட்டத்தில், தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெயராம், வட்டாட்சியா் ரவிசந்திரன், அரசியல் கட்சி பிரதிநிதிகள், திருமண மண்டபம், தங்கும் விடுதி உரிமையாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com