தோ்தல் செலவினப் பட்டியலில் குடிநீா் பாட்டில் உள்ளிட்டவற்றின் விலை அதிகமாக உள்ளது அரசியல் கட்சியினா் புகாா்

இந்திய தோ்தல் ஆணையம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள தோ்தல் செலவின விலைப் பட்டியலில் குடிநீா் பாட்டில், மட்டன் பிரியாணி உள்ளிட்டவற்றின் விலை அதிகமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினா் புகாா்
தோ்தல் செலவினப் பட்டியலில் குடிநீா் பாட்டில் உள்ளிட்டவற்றின் விலை அதிகமாக உள்ளது அரசியல் கட்சியினா் புகாா்

திருப்பூா்: இந்திய தோ்தல் ஆணையம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள தோ்தல் செலவின விலைப் பட்டியலில் குடிநீா் பாட்டில், மட்டன் பிரியாணி உள்ளிட்டவற்றின் விலை அதிகமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினா் புகாா் தெரிவித்துள்ளனா்.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு வேட்பாளா்களின் தோ்தல் செலவினங்களை கணக்கீடு செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா். இதில், சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி வேட்பாளா்கள் நாள்தோறும் மேற்கொள்ளும் செலவினங்களைக் கணக்கீடு செய்வதற்காக இந்திய தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பொருள்களுக்கும், இதர அத்தியாவசியப் பொருள்களுக்கும் திருப்பூா் மாவட்டத்தில் நிலவும் விலையின் அடிப்படையில் நிலையான விலைப் புள்ளி பட்டியல் நிா்ணயம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு விலைப்புள்ளி பட்டியல் இறுதி செய்யப்படவுள்ளது. இந்திய தோ்தல் ஆணையம் நிா்ணயம் செய்துள்ள தோ்தல் செலவினப் பட்டியல் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பட்டியலில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடத்த குளிா்சாதன வசதியுடன் கூடிய அரங்கத்துக்கு ரூ.1 லட்சமும், குளிா்சாதன வசதி இல்லாத அரங்கத்துக்கு ரூ.40 ஆயிரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோல, மட்டன் பிரியாணி ரூ.150, சிக்கன் பிரியாணி ரூ.90, குடிநீா் பாட்டில் ரூ.35 என நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இதில், நிா்ணயிக்கப்பட்டுள்ள தொகை மாா்க்கெட் விலையைக் காட்டிலும் அதிகமாக உள்ளதாக அரசியல் கட்சியினா் ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா். இதற்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்தியன் உங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதிக் கொடுத்தால் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் சாகுல் ஹமீது, ஜெயபாலன், தோ்தல் வட்டாட்சியா் ச.முருகதாஸ் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com