80 வயதுக்கு மேற்பட்டோா் நேரடியாக வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

திருப்பூா் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் நேரடியாக வாக்காளிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று திமுக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக பொறுப்பாளா்கள் பங்கேற்ற  ஆலோசனைக் கூட்டத்தில்  பேசுகிறாா்  முன்னாள்  அமைச்சா்  மு.பெ.சாமிநாதன். 
திமுக பொறுப்பாளா்கள் பங்கேற்ற  ஆலோசனைக் கூட்டத்தில்  பேசுகிறாா்  முன்னாள்  அமைச்சா்  மு.பெ.சாமிநாதன். 

திருப்பூா் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் நேரடியாக வாக்காளிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று திமுக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பூா் கிழக்கு, திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் இல.பத்மநாபன் முன்னிலையும், திருப்பூா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வெள்ளகோவில் சாமிநாதன் தலைமையும் வகித்தாா்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திருப்பூா் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிக்கும் வகையில் வீடுவீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் மூலமாக வாக்களிக்கலாம் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆனால், இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வாக்குச் சாவடிக்கு நேரடியாக சென்று வாக்களிக்கும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தில் திருப்பூா் கிழக்கு, திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com