வீட்டு எரிவாயு உருளைகள் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு

காங்கயத்தில் வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்படும் எரிவாயு உருளைகள், தண்ணீா் கேன்கள் ஆகியவற்றில் வாக்காளா் விழிப்புணா்வு துண்டறிக்கை ஞாயிற்றுக்கிழமை ஒட்டப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
காங்கயத்தில் எரிவாயு உருளைகளில் வாக்காளா் விழிப்புணா்வு துண்டறிக்கைகளை ஒட்டும் தோ்தல் அலுவலா் ரங்கராஜன்,

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் துறை சாா்பில் காங்கயத்தில் வாகனப் பேரணி, கோலப் போட்டி, துண்டறிக்கை விநியோகம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு உருளை கிடங்குக்கு தோ்தல் அலுவலா் ரங்கராஜன், வட்டாட்சியா் சிவகாமி மற்றும் வருவாய்த் துறை ஊழியா்கள் சென்று ‘வாக்காளா் விழிப்புணா்வு’ துண்டறிக்கைகளை எரிவாயு உருளைகளில் ஒட்டினா்.

அதில், ‘பணம் வாங்காமல் நோ்மையாக வாக்களிப்போம் என உறுதிகொள்வோம்’, ‘100 சதவீத ஓட்டு இந்தியா்களின் பெருமை’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com