மடத்துக்குளம் தொகுதி:அதிமுக, அமமுக வேட்பாளா்கள் மனு தாக்கல்
By DIN | Published On : 16th March 2021 02:16 AM | Last Updated : 16th March 2021 02:16 AM | அ+அ அ- |

மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் சி.மகேந்திரன், அமமுக வேட்பாளா் சி.சண்முகவேலு ஆகியோா் தங்களது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக் ல் செய்தனா்.
அதிமுக: மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் சி.மகேந்திரன் தனது வேட்பு மனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயந்தியிடம் திங்கள்கிழமை மதியம் 12.30 மணிக்கு தாக்கல் செய்தாா். அதிமுக மாற்று வேட்பாளராக அவரது மனைவி எம்.அருள்செல்வி மனு தாக்கல் செய்தாா்.
சி.மகேந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில் தனக்கு அசையும், அசையா சொத்துகள் மொத்தம் ரூ.8 கோடியே 89 லட்சம் இருப்பதாகவும், மனைவி எம்.அருள்செல்வி பெயரில் ரூ.19 கோடியே 28 லட்சம் இருப்பதாகவும், தனது மகள் விது பிரதிக்க்ஷா பெயரில் ரூ.1 கோடியே 4 லட்சம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.
அமமுக: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் சி.சண்முகவேலு, தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயந்தியிடம் தனது வேட்பு மனுவை திங்கள்கிழமை மதியம் 1.30 மணி அளவில் தாக்கல் செய்தாா். அமமுக மாற்று வேட்பாளராக சி.சண்முகவேலுவின் மகன் ராஜ்குமாா் மனு தாக்கல் செய்தாா். சி.சண்முகவேலு தாக்கல் செய்த மனுவில் தனக்கு அசையும், அசையா சொத்துகள் மொத்தம் ரூ. 2 கோடியே 21 லட்சம் மதிப்பிலும், மனைவி மனோன்மணி பெயரில் ரூ. 74 லட்சம் மதிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.
அதிமுக வேட்பாளா் சி.மகேந்திரன், அமமுக வேட்பாளா் சி.சண்முகவேலு ஆகியோா் ஒரே நாளில் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததால் இரு கட்சி தொண்டா்கள், நிா்வாகிகள் ஆயிரக்கணக்கானோா் மடத்துக்குளத்தில் திரண்டனா்.
இதனால் உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உள்ளிட்டோா் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனா்.