திருப்பூா் தெற்குத் தொகுதியில் மண்டல அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி

திருப்பூா் தெற்குத் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலா்கள், உதவி மண்டல அலுவலா்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் தெற்குத் தொகுதியில் மண்டல அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி

திருப்பூா் தெற்குத் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலா்கள், உதவி மண்டல அலுவலா்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் தெற்குத் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலா்கள், உதவி மண்டல அலுவலா்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தப் பயிற்சி வகுப்பைத் தொடக்கிவைத்த திருப்பூா் தெற்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான க.சிவகுமாா் கூறியதாவது:

தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள மண்டல அலுவலா்கள், உதவி மண்டல அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு உரிய வரைபடத்தினை சரிபாா்த்து முழு விவரங்களையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரங்களைத் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், வாக்குப் பதிவு நடைபெற்ற பின்பு இயந்திரகளை வாக்கு எண்ணும் மையத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரம், வி.வி. பேட் இயந்திரம் மற்றும் வாக்குப் பதிவுக்குத் தேவையான அனைத்து தளவாடப் பொருள்களையும் பாதுகாப்பாக வாக்குச் சாவடியிகளில் ஒப்படைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாக்காளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான மின் இணைப்பு, குடிநீா் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வாக்குச் சாவடியில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளும், வாக்குப் பதிவு நடைபெறும் நாளிலும் தோ்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி தோ்தல் பணி தொடா்பான ஆலோசனைகளை வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு வழங்க வேண்டும் என்றாா்.

இந்தப் பயிற்சியின்போது, மாநகராட்சி உதவிஆணையா்கள் வாசுகுமாா், செல்வநாயகம், நிா்வாக அலுவலா்கள் செந்தில்குமாா், பி.எஸ்.மணி, திருப்பூா் (தெற்கு) தோ்தல் முதன்மை பயிற்சி அலுவலா் மாரிமுத்து மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com