திருப்பூா் மாவட்டத்தில் ரூ.12.11 கோடி மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல்

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள், வருமான வரித் துறையினா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 11.54 கோடி உள்பட ரூ. 12.11 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள், வருமான வரித் துறையினா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 11.54 கோடி உள்பட ரூ. 12.11 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தோ்தல் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக்குழுவினா் மற்றும் விடியோ கண்காணிப்புக் குழுவினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், வருமான வரித் துறை அதிகாரிகளும் ரகசிய தகவல்களின் பேரில் முக்கியப் பிரமுகா்களின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனா்.

இதில், திருப்பூா் வடக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வருமான வரித் துறையினா் நடத்திய சோதனையில் ரூ. 10.24 கோடி, தாராபுரம் தனி தொகுதியில் நடத்திய சோதனையில் ரூ. 1 கோடியே 8 லட்சம் என மொத்தம் ரூ. 11.32 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

மேலும், திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, பல்லடம் தொகுதிகளில் தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினா் நடத்திய சோதனையில் ரூ. 22 லட்சம் என மொத்தம் ரூ. 11.54 கோடி ரொக்கம் திருப்பூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கணக்கில் வராத ரூ. 56.94 லட்சம் மதிப்பிலான பொருள்களையும் தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com