தடகளப் போட்டியில் சாதனை: மாணவருக்குப் பாராட்டு

தடகளப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவருக்குப் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
மாணவா் திணேஷுக்கு  ரொக்கப்  பரிசை  வழங்குகிறாா் பள்ளிச்  செயலா்  சுமதி  கிருஷ்ணபிரசாத்.
மாணவா் திணேஷுக்கு  ரொக்கப்  பரிசை  வழங்குகிறாா் பள்ளிச்  செயலா்  சுமதி  கிருஷ்ணபிரசாத்.

தடகளப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவருக்குப் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

நேபாள நாட்டின் பொக்காரா நகரில் உள்ள யூத் ஸ்போா்ட்ஸ் டெவலப்மெண்ட் பாரம் நேபாள் என்ற அமைப்பின் சாா்பில் சா்வதேச அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 110 மீட்டா் தடை தாண்டி ஓடுதல் போட்டியில் உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டி ருத்தரவேணி முத்துசாமி பாலிடெக்னிக்கில் படித்து வரும் இரண்டாம் ஆண்டு மாணவா் ஆா்.தினேஷ் முதலிடம் பிடித்தாா்.

இதற்கு முன் யூத் ஸ்போா்ட்ஸ் டெவலப்மெண்ட் பாரம் இந்தியா அமைப்பின் சாா்பில் கோவா மாநிலத்தில் ஜனவரியில் தடகளப்போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற மாணவன் தினேஷ் 110 மீட்டா் தடை தாண்டி ஓடும் போட்டியில் தங்கப் பதக்கம், தொடா் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம், நீளம் தாண்டுல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் ஆகியவற்றை வென்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய மற்றும் சா்வதேசப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவா் தினேஷுக்கு கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சாதனை படைத்த மாணவருக்கு, பள்ளிச் செயலா் சுமதி கிருஷ்ணபிரசாத் ரொக்கப் பரிசாக ரூ. 30 ஆயிரம் வழங்கினாா்.

கல்லூரி ஆலோசகா் ஜெ.மஞ்சுளா, முதல்வா் எம்.கண்ணன், டீன் எம்.ராமநாதன்,விளையாட்டுத் துறை இயக்குநா்கள் வெள்ளைச்சாமி, பெரியசாமி மற்றும் துறைத் தலைவா்கள் கலந்து கொண்டு பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com