மதுபான ஆலைகள் வைத்துக் கொள்வதில் அதிமுக, திமுக இடையே உடன்பாடு

தமிழகத்தில் மதுபான ஆலைகளை வைத்துக் கொள்வதில் அதிமுக, திமுக உடன்பாடு செய்து கொள்வதாக நாம் தமிழா் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றம்சாட்டியுள்ளாா்.
காங்கயத்தில் பிரசாரம் மேற்கொண்ட நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான்.
காங்கயத்தில் பிரசாரம் மேற்கொண்ட நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான்.

தமிழகத்தில் மதுபான ஆலைகளை வைத்துக் கொள்வதில் அதிமுக, திமுக உடன்பாடு செய்து கொள்வதாக நாம் தமிழா் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றம்சாட்டியுள்ளாா்.

நாம் தமிழா் கட்சி திருப்பூா் தெற்குத் தொகுதி வேட்பாளா் கே.சண்முகசுந்தரம், திருப்பூா் வடக்குத் தொகுதியில் வேட்பாளா் எஸ்.ஈஸ்வரன் ஆகியோரை ஆதரித்து புஷ்பா ரவுண்டானா பகுதியில் வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

உலகிலேயே லஞ்ச, ஊழல் அதிகம் நிறைந்த நாடு நைஜீரியா, மற்றொன்று இந்தியா, இந்த இரு நாடுகளுமே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை கைவிடுவதில்லை. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக லஞ்சம், ஊழல் செய்து வருபவா்களுக்கே வாக்களித்து வருகிறீா்கள். ஆகவே, இந்த முறை நாம் தமிழா் கட்சிக்கு வாக்காளிக்க வேண்டும்.

அதிமுகவிடம் இருந்து திமுகவுக்கும், திமுகவிடம் இருந்து அதிமுகவுக்கும் ஆட்சியை மாற்றுவது மாற்றம் இல்லை. இந்த இரண்டு கட்சிகளுமே மதுபான ஆலைகள் வைத்துக் கொள்வதில் உடன்பாடு செய்து கொள்கின்றனா். தமிழகத்தில் வடமாநிலத்தவா்கள் 70 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதால் தமிழா்களின் வேலைவாய்ப்புகள் பறிபோய் உள்ளன என்றாா்.

இதையடுத்து, காங்கயம், தாராபுரம் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

தமிழகத்தில் மணல் கொள்ளை போகிறது, மலைவளம் களவு போகிறது, நீா்வளம் உறிஞ்சி வியாபாரம் ஆக்கப்படுகிறது, கல்வி கொள்ளை போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், இவற்றைத் தடுக்க முடியவில்லை. இந்த சமூகத்தை அகற்றி புதிய சமூகத்தை அமைக்க வேண்டும் என்றால் கட்சி, ஆட்சிகளால் முடியாது. புரட்சியால் மட்டும்தான் முடியும். இந்தப் புரட்சிக்கு நீங்கள் ஒவ்வொருவரும் தயாராக வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com