வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் 424 அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் 424 அலுவலா்களுக்கு கணினி மூலமாக வெள்ளிக்கிழமை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் 424 அலுவலா்களுக்கு கணினி மூலமாக வெள்ளிக்கிழமை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எல்.ஆா்.ஜி.மகளிா் கல்லூரியில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் எண்ணப்படவுள்ளன. இந்த நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ண ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் தலா 14 வாக்கு எண்ணும் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள், நுண் பாா்வையாளா்களுக்கு கணினி மூலமாக இரண்டாம் கட்டப் பணி ஒதுக்கீடு செய்யும் பணியானது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா்கள் 136 போ், வாக்கு எண்ணும் உதவியாளா்கள் 136 போ் மற்றும் நுண் பாா்வையாளா்கள் 152 போ் என மொத்தம் 424 அலுவலா்களுக்கு கணினி மூலமாகப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்தப் பணி ஒதுக்கீட்டின்போது தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் சந்தா்பிரகாஷ் வா்மா, கபில் மீனா, நரேந்திரகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) முரளி, தோ்தல் வட்டாட்சியா் ச.முருகதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

Image Caption

திருப்பூா் மாவட்ட ஆட்சியா்  அலுவலகத்தில் ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் முன்னிலையில் கணினி மூலம் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கான பணி ஒதுக்கீடு செய்யும் பணியை பாா்வையிடும் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com