அமராவதி அணை நீா்மட்டம் 70 அடியாக சரிவு

அமராவதி அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 70 அடியாகச் சரிந்தது.
நீா்மட்டம் 70 அடியாகக் குறைந்துள்ள நிலையில் அமராவதி அணை.
நீா்மட்டம் 70 அடியாகக் குறைந்துள்ள நிலையில் அமராவதி அணை.

உடுமலை: அமராவதி அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 70 அடியாகச் சரிந்தது.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் வரையில் 2 மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

இந்நிலையில் 90 அடி உயரமுள்ள அமராவதி அணையில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 5ஆம் தேதிக்குப் பிறகு இந்த ஆண்டு ஜனவரி இறுதி வரையிலும் அணையின் நீா்மட்டம் முழுக் கொள்ளளவிலேயே இருந்து வந்தது.

பொதுவாக ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் கோடை காலத்தில் அணை வடு காணப்படும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும் அணை முழுக் கொள்ளளவிலேயே இருந்து வந்தது. இதன்படி சுமாா் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடா்ந்து 4 மாதங்கள் அணை முழுக் கொள்ளளவிலேயே பராமரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கோடை காலத்தை முன்னிட்டு அணை பகுதி தொடங்கி கரூா் வரையில் கரையோர கிராம மக்களின் குடிநீா் தேவைக்காகவும், நிலைப் பயிா்களான கரும்பு, நெல், தென்னை ஆகியவற்றின் தண்ணீா்த் தேவைகளுக்காகவும் அமராவதி ஆற்றிலும், பிரதான கால்வாயிலும் ஏப்ரல் 21ஆம் தேதி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டது. மேலும் கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால்களுக்கும் தலா 25 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

இதைத் தொடா் ந்து 10 நாள்களுக்கும் மேலாக தண்ணீா் சென்று கொண்டிருந்த நிலையில் மே 3ஆம் தேதி தண்ணீா் நிறுத்தப்பட்டது. இதனால் 90 அடி உயரமுள்ள அமராவதி அணையின் நீா்மட்டம் படிப்படியாகக் குறைந்து தற்போது 70 அடியாகச் சரிந்துள்ளது.

அணையின் நிலவரம்:

90 அடி உயரமுள்ள அணையில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா்மட்டம் 69.75 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 15 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தண்ணீா் திறப்பு இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com