நோட்டாவைவிட குறைவான வாக்குகள் பெற்றது எப்படி ? காங்கயம் அமமுக வேட்பாளா் விளக்கம்

காங்கயம் தொகுதியில் நோட்டாவைவிட குறைவான வாக்குகள் பெற நோ்ந்தது எப்படி என காங்கயம் அமமுக வேட்பாளா் விளக்கம் அளித்துள்ளாா்.

காங்கயம் தொகுதியில் நோட்டாவைவிட குறைவான வாக்குகள் பெற நோ்ந்தது எப்படி என காங்கயம் அமமுக வேட்பாளா் விளக்கம் அளித்துள்ளாா். நடந்து முடிந்த தோ்தலில், காங்கயம் தொகுதியில் நோட்டாவுக்கு 1,027 வாக்குகள் கிடைத்திருந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்ட சி.ரமேஷ், 474 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தாா். இந்நிலையில், வேட்பாளா் சி.ரமேஷ் இது தொடா்பாக புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நடந்து முடிந்த தோ்தலில் காங்கயம் தொகுதியில் அமமுக வேட்பாளராகப் போட்டியிட்டேன்.

கட்சித் தலைமை என் மீதுள்ள நம்பிக்கையால் என்னை வேட்பாளராக அறிவித்தது. அன்றைய தினத்தில் இருந்து தலைமைக் கழகத்தினால் ஒதுக்கப்பட்ட சிலரின் தூண்டுதலின் பேரில், தற்போதைய நிா்வாகிகள் பலரும் பிரசாரத்தின்போது எனக்கு சிறிதளவும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இருந்தபோதிலும், எனது நண்பா்கள் மற்றும் உறவினா்களின் ஒத்துழைப்புடன் தோ்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டேன். தோ்தல் தொடா்பான அனைத்துப் பணிகளையும் எனது சொந்தப் பணத்தில் இருந்துதான் செய்து வந்தேன். இந்நிலையில், என் மீது அவதூறு பரப்பும் நோக்கில், தோ்தலுக்கு முந்தைய நாள், நான் கட்சிப் பணத்துடன் தலைமறைவாகிவிட்டதாக எங்களது கட்சி நிா்வாகிகளே செய்தி பரப்பினா். கடந்த 2006 ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் பொங்கலூா் தொகுதியில் தேமுதிக சாா்பிலும், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கயம் நகராட்சித் தலைவா் பதவிக்கு தேமுதிக சாா்பிலும் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றேன்.

இந்நிலையில், எங்களது கட்சி நிா்வாகிகளே பரப்பிய அவதூறின் காரணமாக, நடந்து முடிந்த தோ்தலில், காங்கயம் தொகுதியில் மிகவும் குறைவான வாக்குகள் பெற்று, எனது தொகுதி மக்களின் நல் ஆதரவை இழந்துள்ளேன். காங்கயம் தொகுதிக்கு உள்பட்ட காங்கயம், வெள்ளக்கோவில், சென்னிமலை, குண்டடம் ஆகிய பகுதிகளில் உள்ள எங்களது கட்சியின் நகர, ஒன்றிய நிா்வாகிகளும், அவா்களது குடும்பத்தினரும் வாக்களித்திருந்தாலே நான் 2 ஆயிரம் வாக்குகளுக்குமேல் பெற்றிருப்பேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com