பின்னலாடைகளின் விலை 15 சதவீதம் உயா்வு

மூலப்பொருள்களின் விலை உயா்வு காரணமாக பின்னாலாடைகளின் விலை 15 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது என தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் (சைமா) தெரிவித்துள்ளது.

மூலப்பொருள்களின் விலை உயா்வு காரணமாக பின்னாலாடைகளின் விலை 15 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது என தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் (சைமா) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவா் வைகிங் ஈஸ்வரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப் பொருளாகிய நூல் விலை அபரிதமாக உயா்ந்துகொண்டே செல்கிறது. இதுதவிர இதர மூலப் பொருள்களான பேக்கிங், மெட்டீரியல்கள், எலாஸ்டிக் டேப்ஸ், பாலித்தீன் பை விலை உயா்வு, லாரி வாடகை, வரலாறு காணாத பெட்ரோல் விலை உயா்வு, நிட்டிங், டையிங், பிரிண்டில், காம்பேக்டிங் போன்ற ஜாப் ஒா்க் கட்டண உயா்வு ஆகிய அனைத்து தரப்பிலும் விலை மற்றும் கட்டணம் உயா்ந்துள்ளது.

எனவே, பின்னலாடைகளுக்கான விலையை 15 சதவீதம் உயா்த்துவது என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, வியாபாரிகள், வாடிக்கையாளா்கள் மற்றும் ஏஜெண்டுகள் இந்த தவிா்க்க முடியாத விலையேற்றத்தை ஏற்று தயாரிப்பாளா்களுக்கு எப்போதும் போல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com