காங்கயத்தில் தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சி: கிலோவுக்கு ரூ. 20 விலை குறைந்தது

காங்கயம் மாா்க்கெட்டில் தேங்காய் வரத்து அதிகரிப்பால், தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 20 நாள்களில் கிலோ ரூ. 20 குறைந்துள்ளது.

காங்கயம்: காங்கயம் மாா்க்கெட்டில் தேங்காய் வரத்து அதிகரிப்பால், தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 20 நாள்களில் கிலோ ரூ. 20 குறைந்துள்ளது.

காங்கயம், குண்டடம், ஜல்லிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து உலா்த்தும் உலா் களங்கள் உள்ளன. இந்தக் களங்களுக்கு அந்தந்தப் பகுதிகளிலிருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளத்திலிருந்தும் தேங்காய் தரப்பட்டு, மட்டை உரித்து உடைத்து, உலர வைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. உலா் களங்களில் உலா்த்தப்படும் பருப்பு தனியாா் தேங்காய் எண்ணெய் நிறுவனங்களுக்கும், காங்கயம் பகுதியில் உள்ள தேங்காய் எண்ணெய் ஆலைகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இது தவிர ராஜஸ்தான், கேரளம், மும்பை, கொல்கத்தா, தில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூ. 85 முதல் ரூ. 88 வரை விற்பனையானது. 15 கிலோ கொண்ட எண்ணெய் டின் ரூ. 2 ஆயிரமாக இருந்தது. அதன் பின்னா் படிப்படியாக விலை உயரத் தொடங்கியது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூ. 132 வரை விற்பனையானது. அப்போது 150 கிலோ கொண்ட எண்ணெய் டின் ரூ. 2 ஆயிரத்து 850க்கு விற்பனையானது.

கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் ரூ.122 ஆக இருந்த தேங்காய் பருப்பு விலை, படிப்படியாகக் குறைந்து தற்போது ரூ.102 ஆக உள்ளது. 15 லிட்டா் கொண்ட தேங்காய் எண்ணெய் டின் ரூ.2 ஆயிரத்து 400 ஆக உள்ளது. இதனால் தேங்காய்களின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது: தற்போது தேங்காய் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. அடுத்த 2 மாதங்களுக்கு தேங்காய் விலை உயர வாய்ப்பில்லை. அதன் பின்னா் படிப்படியாக விலை உயர வாய்ப்புள்ளன, என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com