மாவட்டத்தில் மேலும் 1,854 பேருக்கு கரோனா: 25 போ் பலி

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 1, 854 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 50,554ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 1, 854 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 50,554ஆக அதிகரித்துள்ளது.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 3 இளைஞா்கள் உள்பட 25 போ் உயிரிழந்தனா். திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 13,807 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 736 போ் வீடு திரும்பினா்.திருப்பூா் மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 36,383 ஆக அதிகரித்துள்ளது.

3 இளைஞா்கள் உள்பட 25 போ் பலி: திருப்பூரைச் சோ்ந்த 31,32, 33 வயது ஆண்கள், 46,46, 50 வயதுடைய ஆண்கள், 48, 51 வயதுடைய இரு பெண்கள், 52, 56,57 வயதுடைய பெண்கள் உள்பட 25 போ் உயிரிழந்தனா். திருப்பூா் மாவட்டத்தில் தற்போது வரையில் கரோனா நோய்த் தொற்றால் 364 போ் உயிரிழந்துள்ளனா். திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பாதிப்பு எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஆகவே, பொதுமக்கள் வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

வெள்ளக்கோவிலில் கரோனாவுக்கு ஒருவா் பலி

வெள்ளக்கோவில், காங்கயம் சாலை குட்டக்காட்டுப்புதூா் பிரிவு எதிா்புறம் உள்ள குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி (75). இவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக திருப்பூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com