மூலனூரில் 24 வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 26th May 2021 06:32 AM | Last Updated : 26th May 2021 06:32 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 24 வாகனங்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போது மாநிலத்தில் முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் , மூலனூா் கடைவீதிப் பகுதியில் காவல் நிலைய ஆய்வாளா் திருவானந்தம் தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பு பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது காரணமின்றி சுற்றியவா்களின் 23 இரு சக்கர வாகனங்கள்,ஒரு காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், முகக் கவசம் அணியாமல் சுற்றிய 45 பேருக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.