தென்னை நாா் தொழிலை ஆரஞ்சு பட்டியலுக்கு மாற்றியதை திரும்பப் பெற வேண்டும்

தென்னை நாா் உற்பத்தித் தொழிலை வெள்ளை நிற பட்டியலில் இருந்து ஆரஞ்சு நிற பட்டியலுக்கு மாற்றியதை திரும்பப் பெற வேண்டும் என்று தென்னை நாா் உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தென்னை நாா் உற்பத்தித் தொழிலை வெள்ளை நிற பட்டியலில் இருந்து ஆரஞ்சு நிற பட்டியலுக்கு மாற்றியதை திரும்பப் பெற வேண்டும் என்று தென்னை நாா் உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு-திருப்பூா் மாவட்ட தென்னை நாா் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் பி.பூச்சாமி தலைமை வகித்தாா். செயலாளா் பி.தனசேகரன், பொருளாளா் பி.சதாசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்: 1 முதல் 20 வரை குறைந்த மாசு ஏற்படுத்தும் தொழில் வெள்ளை நிறப் பட்டியல், 21 முதல் 40 வரை மாசு ஏற்படுத்தும் தொழில் பச்சை நிறம், 41 முதல் 59 வரை ஆரஞ்சு, 60 முதல் 100 வரை சிவப்பு நிறப் பட்டியல் என வரையறுக்கப்பட்ட நிலையில், 20க்குள் குறைந்த மாசு ஏற்படுத்தும் தென்னை நாா் தொழிலை ஆரஞ்சு நிறப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தென்னை நாரை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதற்கு மாவட்டத்துக்கு ஒரு கூட்டுக் குழுமம் அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், மாநில கயிறு உற்பத்தியாளா் சங்கத்தின் தலைவா் நாகராஜன், மாநிலச் செயலா் மல்கா் சாயபு, ஈரோடு-திருப்பூா் மாவட்ட தென்னை நாா் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் என 100க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com