திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கரோனா
By DIN | Published On : 17th October 2021 11:27 PM | Last Updated : 17th October 2021 11:27 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 94,376ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 818 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 76 போ் வீடு திரும்பினா்.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 92,590ஆக அதிகரித்துள்ளது. கரோனா நோய்த் தொற்றால் சிகிச்சையில் இருந்த ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இறப்பு எண்ணிக்கை 967ஆக அதிகரித்துள்ளது.