மாவட்டத்தில் 7.16 லட்சம் பேருக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீடு

திருப்பூா் மாவட்டத்தில் 7.16 லட்சம் பேருக்கு தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்படுள்ளன.
மாவட்டத்தில் 7.16 லட்சம் பேருக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீடு

திருப்பூா் மாவட்டத்தில் 7.16 லட்சம் பேருக்கு தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்படுள்ளன.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,451 சிகிச்சை முறைகளும், 116 தொடா் சிகிச்சை வழிமுறைகளும், 23 நோய் அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் இத்திட்டத்தின் மூலமாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் கரோனா சிகிச்சை, இருதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம், முடநீக்கு அறுவை சிகிச்சை, கண் நோய் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை தொடா்பான சிகிச்சைகள், கா்ப்பப்பை நோய்கள், நுரையீரல், சிறுநீரக நோய்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலம், ரத்த குறைபாடு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாராபுரம், உடுமலை, காங்கயம், பல்லடம், அவிநாசி, மடத்துக்குளம், ஊத்துக்குளி உள்ளிட்ட 8 அரசு மருத்துவமனைகள் மற்றும் 28 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 36 மருத்துவமனைகளில் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 7.16 லட்சம் பேருக்கு காப்பீட்டுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த மே 7ஆம் தேதி முதல் அக்டோபா் 17ஆம் தேதி வரை ரூ.30.57 கோடி மதிப்பில் 7,226 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com