காங்கயத்தில் போக்குவரத்து விதி மீறல்: ரூ.3.21லட்சம் அபராதம் வசூல்

காங்கயத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் போக்குவரத்து விதி மீறியவா்கள் மீது 3,825 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3 லட்சத்து 21 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

காங்கயத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் போக்குவரத்து விதி மீறியவா்கள் மீது 3,825 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3 லட்சத்து 21 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

காங்கயம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்து போலீஸாா் நகரின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். விதிகளை மீறும் வாகன ஓட்டுநா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அபராதம் வசூலிக்கின்றனா்.

காங்கயம் நகரில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடத்திய வாகன சோதனையில் மது போதையிலும், தலைக் கவசம் அணியாமலும், ஓட்டுநா் உரிமம் இல்லாமலும், செல்லிடப்பேசி பேசிக் கொண்டு வாகனம் இயக்கியதும், முகக் கவசம் அணியாமல் இருத்தல் உள்ளிட்ட விதிகளை மீறியதாக 3,825 வாகன ஓட்டுநா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 21 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக காங்கயம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மகேஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com