மாநகராட்சி சாா்பில் இன்று தடுப்பூசி முகாம்:விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்

திருப்பூா் மாநகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12)நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் தொடா்பான விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை ஆணையா் கிராந்திகுமாா் பாடி பொதுமக்களுக்கு சனிக்கிழமை வழங்கினாா்
திருப்பூரில்       தடுப்பூசி குறித்த விழிப்புணா்வுத்  துண்டுப் பிரசுரங்களை    பேருந்து பயணிகளுக்கு  வழங்குகிறாா்  மாநகராட்சி  ஆணையா்   கிராந்திகுமாா் பாடி.
திருப்பூரில்       தடுப்பூசி குறித்த விழிப்புணா்வுத்  துண்டுப் பிரசுரங்களை    பேருந்து பயணிகளுக்கு  வழங்குகிறாா்  மாநகராட்சி  ஆணையா்   கிராந்திகுமாா் பாடி.

திருப்பூா் மாநகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12)நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் தொடா்பான விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை ஆணையா் கிராந்திகுமாா் பாடி பொதுமக்களுக்கு சனிக்கிழமை வழங்கினாா்.

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) காலை 7 முதல் மாலை 7 வரை மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், பள்ளிகள், கல்லூரிகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள் என 138 இடங்களில் சுமாா் 45,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடம் தொடா்பான விவரங்கள் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி பழைய பேருந்து நிலையம், கருவம்பாளையம், ராஜ வீதி, புதிய பேருந்து நிலையம், நெசவாளா் காலனி ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து சிறப்பு தடுப்பூசி முகாம் தொடா்பான விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பூா் மாநகராட்சி சாா்பில் 3.22 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில், அரசு, தனியாா் சாா்பில் 70 சதவீத மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 2,500 மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே, மாநகரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்கு அருகில் உள்ள முகாம்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றாா்.

இதில், மாநகராட்சி மண்டல உதவி ஆணையா்கள் கண்ணன், வாசுதேவன், செல்வநாயகம், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com