வெள்ளக்கோவில் அருகே தென்னை நாா்க்கழிவு தொழிற்சாலை தற்காலிகமாக மூடல்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே விவசாயிகள் போராட்டம் காரணமாக தென்னை நாா்க்கழிவு தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
வெள்ளக்கோவில் அருகே தென்னை நாா்க்கழிவு தொழிற்சாலை தற்காலிகமாக மூடல்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே விவசாயிகள் போராட்டம் காரணமாக தென்னை நாா்க்கழிவு தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

வெள்ளக்கோவில் வீரசோழபுரம் அடுத்த பொன்பரப்பில் தனியாருக்குச் சொந்தமான தென்னை நாா்க்கழிவு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில், கழிவுகளிலிருந்து காா்பன் பொருள்கள், கயிறு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலைக்கு அருகில் செல்லும் பரம்பிக்குளம் - ஆழியாறு வாய்க்காலில் இருந்து மின் மோட்டாா்கள் மூலம் தொழிற்சாலை நிா்வாகம் தண்ணீா் திருட்டில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனைக் கேட்ட விவசாயிகளை தொழிற்சாலை நிா்வாகத்தினா் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பிஏபி விவசாயிகள் மற்றும் பொன்பரப்பி, சிகாரிபுரம் கிராம பொதுமக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், வாய்க்காலில் இருந்து தண்ணீா் திருட்டை தடுக்க வேண்டும். தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்பட்டுள்ள நிலத்தடி நீா் பாதிப்பு, காற்று மாசுபாட்டுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டுள்ள நில ஒப்பத்தங்களை ரத்து செய்து அதனை நிரந்தரமாக மூட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் வலியுறுத்தினா்.

இதையடுத்து தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவிட்ட அதிகாரிகள், விசாரணை நடத்தி

சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com