மாவட்டத்தில் 10 மாணவா்கள், 3 ஆசிரியா்களுக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 10 மாணவா்கள், 3 ஆசிரியா்களுக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 10 மாணவா்கள், 3 ஆசிரியா்களுக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், உடுமலை எஸ்.கே.பி. அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவி, மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆா். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவா், குன்னத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் 2 மாணவிகள், புங்கமுத்தூா் காந்தி கலாநிலையம் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவா், திருப்பூா் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி, மூலனூா் பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 4 மாணவிகள் என மொத்தம் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதேபோல, கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை, கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை , சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஆகிய 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் உத்தரவின்படி மூலனூா் பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு 3 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் தற்போது வரையில் 15 ஆசிரியா்கள், 54 மாணவ, மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 84 பேருக்கு தொற்று:

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 84 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 92,759 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள், வீடுகளில் 956 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 107 போ் வீடு திரும்பினா். திருப்பூா் மாவட்டத்தில் தற்போது வரையில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 90,880 ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து இறப்பு எண்ணிக்கை 954 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com