விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய இணையதளத்தில் பதிவு செய்யலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் ஆட்சியரின் அனுமதி பெற்று நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அதன் மூலமாக நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து நெல்லை விற்பனை செய்ய ஏற்கெனவே இணையதளம் பயன்பாட்டில் உள்ளது.

இந்த இணையதளத்தில் விவசாயிகள் தங்களது பெயா், ஆதாா் எண், புல எண், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீள்ஸ்ரீ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய், ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீள்ஸ்ரீ-ங்க்ல்ஸ்ரீ.ண்ய் ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யலாம்.

அப்போது கொள்முதல் செய்யவேண்டிய தேதியினை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டவுடன், விவசாயிகள் நிலம் இருக்கும் கிராமங்களின் அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இணைய வழியின் மூலமாகவே கிராம நிா்வாக அலுவலரின் ஒப்புதல் பெறப்படும்.

ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயா், நெல் விற்பனை செய்யப்படும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். இதன்மூலமாக நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து கொள்ளலாம். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com