அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்மேயா் என்.தினேஷ்குமாா் வேண்டுகோள்

திருப்பூரில் அனைத்து வீடுகளிலும் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று மாநகராட்சி மேயா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

திருப்பூரில் அனைத்து வீடுகளிலும் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

75 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவைக் கொண்டாடுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் பேசியதாவது:

இந்தியா முழுவதும் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து வீடுகளிலும் வரும் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினவிழாவைக் கொண்டாட வேண்டும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். ஆகவே, திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுவது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையா்கள், மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com