தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,301 வழக்குகளுக்குத் தீா்வு

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக 2,301 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக 2,301 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் பேரில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகங்களில்

20 அமா்வுகளாக தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்து.

இந்த நிகழ்வை முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் தொடக்கிவைத்தாா். இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கி வாராக் கடன் வழக்குகள் என மொத்தம் 5,164 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 2,301 வழக்குகளுக்கு ரூ.33.65 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டன.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com