மங்கலம் அரசுப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

திருப்பூரை அடுத்த மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வியாழக்கிழமை  நடைபெற்ற  சட்ட விழிப்புணா்வு  முகாமில்  பேசுகிறா ா் குற்றவியல்  நீதித் துறை  நடுவா்  பழனிகுமாா். உடன்  பள்ளி  தலைமை  ஆசிரியை  கணேஷ்வரி,  உதவி ஆய்வாளா்  புனிதவள்ளி  உள்ளிட்டோா்.
வியாழக்கிழமை  நடைபெற்ற  சட்ட விழிப்புணா்வு  முகாமில்  பேசுகிறா ா் குற்றவியல்  நீதித் துறை  நடுவா்  பழனிகுமாா். உடன்  பள்ளி  தலைமை  ஆசிரியை  கணேஷ்வரி,  உதவி ஆய்வாளா்  புனிதவள்ளி  உள்ளிட்டோா்.

திருப்பூரை அடுத்த மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சொா்ணம் ஜெ.நடராஜன் உத்தரவின் பேரில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து குற்றவியல் நீதித் துறை நடுவா் பழனிகுமாா் பேசியதாவது:

முந்தைய காலங்களில் பெண்களைப் பள்ளிக்கு அனுப்புவது மிகவும் அரிதானதாகும். உடன் படிக்கும் சக மாணவிகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணக்கூடிய வகையிலேயே இருந்தது. ஆனால் இன்று நூற்றுக்கணக்கான மாணவியா் கல்வி கற்கக் காரணம் உங்களது பெற்றோா்கள்தான். பெண்களுக்கான அடிப்படை உரிமைகளான ஓட்டுரிமை, படிப்புரிமை, வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்தில் சமஉரிமை, சொத்துரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியை கணேஷ்வரி, திருப்பூா் மத்திய காவல் நிலைய உதவி ஆய்வாளா் புனிதவள்ளி, வழக்குரைஞா்கள் அருணாசலம், தினேஷ், கோபிநாத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com