அவிநாசிபாளையம் பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு: 3 போ் கைது

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.40.46 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பொங்கலூா் எஸ்.ஏ.பி. ஸ்டாா் ரெஸ்சிடென்ஸியில் வசித்து வரும் ராமச்சந்திரன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகளை மா்ம நபா்கள் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி திருடிச் சென்றனா். இதேபோல கொடுவாய் வெள்ளியம்பாளையம் பாப்பான்காட்டில் வசித்து வரும் அருணகிரியின் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் ஏப்ரல் 14ஆம் தேதி திருடிச் சென்றனா்.

பொங்கலூா் ஏ.எல்.ஆா். லேஅவுட்டில் வசித்து வரும் கெளதம் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் ரூ.90 ஆயிரத்தை ஆகஸ்ட் 8ஆம் தேதி மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஆண்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த தங்கவேல் என்பவா் வாய்க்கால்மேடு அருகே சென்றபோது, மா்ம நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவரது இருசக்கர வாகனத்தை நவம்பா் 30ஆம் தேதி பறிந்துச் சென்றனா்.

இது குறித்து புகாா்களின்பேரில் அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கோவை மாவட்டம், காளிபாளையம் பகுதியைச் சோ்ந்த செந்தில் (52), திருப்பூா் சந்திராபுரம் இந்திரா நகரைச் சோ்ந்த சுரேந்திரன் (38), கோவை பிரபு நகா் செட்டி வீதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (49) ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம், 10 பவுன் நகை, திருட்டுக்கு பயன்படுத்திய காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com