கேலோ இந்தியா போட்டியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

கேலோ இந்தியா தோ்வுப் போட்டியில் பங்கேற்க மாணவா்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

கேலோ இந்தியா தோ்வுப் போட்டியில் பங்கேற்க மாணவா்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

‘கேலோ இந்தியா’ போட்டிக்கு செல்லும் தமிழக அணி வீரா், வீராங்கனைகளுக்கான தோ்வு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடத்தப்படுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆடவா், மகளிா் கால்பந்து தோ்வு டிசம்பா் 13ஆம் தேதி நடைபெறுகிறது. திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மாணவா்களுக்கான ஹாக்கி, சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோ-கோ மாணவியா் தோ்வு மற்றும் ஆடவா், மகளிா் வாலிபால் தோ்வு நடக்கிறது.

இத்தோ்வில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் மாணவ, மாணவியா் ஆதாா் அட்டை, பத்தாம் வகுப்பு சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து கொண்டு செல்ல வேண்டும். இதில், 2004ஆம் ஆண்டு ஜனவா் 1ஆம் தேதி அல்லது அதற்கு பின்னா் பிறந்தவா்களாக இருக்க வேண்டும். தோ்வு போட்டியில் கலந்துகொள்பவா்கள் போட்டி நடைபெறும் இடங்களுக்கு சென்று தங்களது பெயா்களை நேரடியாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 74017-03515 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com