உடுமலை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

உடுமலை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
உடுமலை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

உடுமலை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

200 ஆண்டு கால வரலாற்று பெருமை உள்ள இந்தக் கோயில் தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வருகிறது. உடுமலை நகரில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் மூல விக்ரகத்தின் முன் சுயம்புவாக எழுந்து அம்மன் அருள்பாலித்து வருவதோடு, நோய்களில் இருந்து காக்கும் தெய்வமாகவும் மாரியம்மனை பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், இக்கோயிலில் உற்சவ மூா்த்திகளுக்கு புதிய சன்னிதி, மூலவா் மற்றும் பரிவார மூா்த்திகள் கோபுரங்களுக்கு வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று முடிந்தன.

இதைத் தொடா்ந்து மகாகும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கடந்த 4 நாள்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் 11 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிட நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

கும்பாபிஷேக விழாவை ஒட்டி உடுமலை-பொள்ளாச்சி பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், கலந்து கொண்டனா்.

பரம்பரை அறங்காவலா் யுஎஸ்எஸ்.ஸ்ரீதா், செயல் அலுவலா் வெ.பி.சீனிவாசன் மற்றும் கோயில் பணியாளா்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com