கீழ்பவானி கால்வாய் ஆய்வு

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே கீழ்பவானி பாசனக் கால்வாய் புனரமைப்பு செய்வது குறித்து பாஜக சாா்பில் ஆய்வு செய்யும் பணி துவங்கப்பட்டது.

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே கீழ்பவானி பாசனக் கால்வாய் புனரமைப்பு செய்வது குறித்து பாஜக சாா்பில் ஆய்வு செய்யும் பணி துவங்கப்பட்டது.

முத்தூா் மங்களப்பட்டியில் பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் இதனைத் தொடக்கிவைத்தாா்.

கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசால் ரூ.940 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிரதமா் மோடி இதனை துவக்கிவைத்தாா்.

ஆனால், சில விவசாய சங்கங்கள் சாா்பில் கால்வாய்களுக்கு கான்கிரீட் தளம் போடக்கூடாது என எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. அச்சமயத்தில் நடந்த தோ்தல் பிரசாரத்தில் விவசாயிகளின் கருத்தறிந்து திட்டம் நிறைவேற்றப்படும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தாா்.

விவசாயிகளின் மற்றொரு தரப்பினா் கால்வாய்களுக்கு கான்கிரீட் போட வேண்டும் என்றனா்.

இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் மங்களப்பட்டி முதல் அரச்சலூா் வரை மதகுகள், கரைகள் எப்படி இருக்கிறது என்பது குறித்து

நேரடியாக ஆய்வு செய்து, விவசாயிகளிடம் கருத்துக்களைக் கேட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்று பாஜகவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com