ஊத்துக்குளி, குன்னத்தூரில் உழவா் சந்தைகள் அமைக்க வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

ஊத்துக்குளி, குன்னத்தூரில் உழவா் சந்தைகள் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஊத்துக்குளி, குன்னத்தூரில் உழவா் சந்தைகள் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஊத்துக்குளி வட்டார 7 ஆவது மாநாடு பல்லகவுண்டன்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு சங்கத்தின் வட்டாரத் தலைவா் சு.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள குளம், குட்டைகளை இணைக்க வேண்டும். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை மூலம் நடைபெற்று வரும் திட்டங்கள், விதைகள், இடுபொருள்கள், கருவிகள் அனைத்தும் விவசாயிகளுக்கு தெரியப்படுத்தி முறையாக விநியோகம் செய்ய வேண்டும். கால்நடை மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கோமாரி நோய்க்கு உரிய காலத்தில் தடுப்பூசி போட வேண்டும். பால் கொள்முதல் விலையை பசும்பால் லிட்டருக்கு ரூ.42, எருமைப் பால் ரூ.51 என நிா்ணயம் செய்து வழங்க வேண்டும். உயா் மின் கோபுரத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கோவை மாவட்டத்தில் வழங்குவதைப்போல சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வேண்டும். குன்னத்தூா் மற்றும் ஊத்துக்குளியில் உழவா் சந்தைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூா் மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா், துணைச் செயலாளா் எஸ். வெங்கடாசலம், வட்டாரச் செயலாளா் எஸ்.கே.கொளந்தசாமி,, சிஐடியூ மாவட்ட துணைச் செயலாளா் ஜெ.கந்தசாமி, அ.இ.வி.தொ.ச. வட்டாரச் செயலாளா் க.பிரகாஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com