வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.69 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வாணியம்பாடி, லாலாப்பேட்டை, வில்வாதம்பட்டி, தேவத்தூா், வையம்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து 200 விவசாயிகள் தங்களுடைய 1,728 மூட்டை கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.
இவற்றின் எடை 91 டன். வெள்ளக்கோவில், ஊத்துக்குளி ஆா்.எஸ், காங்கயம், முத்தூரைச் சோ்ந்த 14 வணிகா்கள் கொப்பரையை வாங்க வந்திருந்தனா்.
கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 85.60க்கும், குறைந்தபட்சமாக ரூ.69.95க்கும், சராசரியாக ரூ.78.80க்கும் விற்பனையானது.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.69 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.