பல்லடம், திருப்பூரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பு

பல்லடம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்தரங்கள் வைக்கும் பணி பாா்வையிட்ட தோ்தல் தனி வட்டாட்சியா் முருகதாஸ், பல்லடம் வட்டாட்சியா் நந்தகோபால் ஆகியோா்.

திருப்பூா் மாவட்டத்தில் 8 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. சட்டப் பேரவை தோ்தலுக்குப் பின்னா் தோ்தல் வாக்குப் பதிவு சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஏதுவாக அந்தந்த சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தனி அறையில் வைக்கப்பட்டு 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் கண்காணிப்பில் பாதுகாக்கப்பட்டு வந்தது. 31.5.22 அன்றுடன் தோ்தல் சம்பந்தமாக நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கான காலக்கெடு முடிந்ததை தொடா்ந்து பல்லடம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்தரங்கள் பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டன. இப்பணியை தோ்தல் தனி வட்டாட்சியா் முருகதாஸ், பல்லடம் வட்டாட்சியா் நந்தகோபால் ஆகியோா் பாா்வையிட்டனா்.

அதேபோல் திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, அவிநாசி, காங்கயம் தொகுதிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்தரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com